வாழைப்பூவின் நன்மைகள்

https://tamilnewsdesk.blogspot.com/
வாழைப்பூவின் நன்மைகள்

வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயன்படக்கூடியது, அந்த வகையில் வாழைப்பூவும் உடல் ஆரோக்கியத்திற்க்கு பெரிதும் பயன் தரக்கூடியது. வாழைப்பூவின் நன்மைகள் காரணமாக பலர் வாழைப்பூவை உணவில் பயன்படுத்துகின்றனர். வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகின்றன, வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன, எடையைக் குறைக்கின்றன. இந்த கட்டுரையில், வாழைப்பூ சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.


வாழைப்பூவின் நன்மைகள்


வாழைப்பூக்கள் வாழை மரத்தின் இதயம் என்று அழைக்கப்படுகிறது. இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து உங்களைக் காப்பாற்றும். வாழைப்பூவின்  பயன்கள் பற்றி பார்ப்போம்.


சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பூவை தங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும், வாழைப்பூவை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம் சிறிது மிளகு மற்றும் பூண்டு சேர்த்து வாழைப்பூ பொரியல் செய்து சாப்பிடலாம், வாழைப்பூவின் பண்புகள் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.


வாழைப்பூவை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். வாழைப்பூவில் உள்ள நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும், ரத்த சோகையும் நீங்கும்.


இதையும் படிக்கலாமே - இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்


இரத்த மூலநோய் உள்ளவர்கள் வாழைப்பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் விரைவாக குணமாகும்.


வாழைப்பூ ரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டது, இவை ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைப்பத்தோடு உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும். வாழைப்பூவை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வரலாம்.


அஜீரண கோளாறு காரணமாக ஏற்படும் வயிற்று கடுப்பு போன்ற பிரச்சனைகளூக்கு வாழைப்பூ பயன் தரும், அஜீரண கோளாறு உள்ளவர்கள் வாழைப்பூவை நறுக்கி சுத்தம் செய்து தண்ணீரில் வேகவைத்து அதனுடன் மிளகு மற்றும் சீரகத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து ஆறியபின் அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் அஜீரணம் நீங்கும்.


அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் உடல் சூடு குறைய வாழைப்பூவை பாசிபருப்புடன் சேர்த்து வேகவைத்து கடைந்து அதனுடன் சிறிது நெய் சேர்த்து வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.


சீரற்ற உணவுமுறை , மனஅழுத்தம் மற்றும் வயிற்றினுள் ஏற்படும் அதிக அமிலத்தன்மை காரணமாக ஏற்படும் வயிற்று புண்கள் ஆற வாழைப்பூவை உங்கள் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் விரைவாக ஆறும்.  


நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பூக்கள் உடல் எடையை குறைக்க உதவும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு உங்கள் பசியையும் கட்டுப்படுத்தும். இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படாது. இதன் மூலம் உங்கள் எடையை கட்டுப்படுத்தலாம்.


இதையும் படிக்கலாமே -   வாழைத்தண்டு  நன்மைகள் 


வாழைப்பூ கர்பப்பபை பிரச்சனைகளை குறைக்க உதவும். கர்பப்பபை பிரச்சனை, வெள்ளைபடுதல் போன்ற பிரச்சனை உள்ள பெண்கள் வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு அதிக இரத்த போக்கு மற்றும் அதனுடன்  உடல் அசதி, வயிற்று வலியும் ஏற்படலாம். வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பெண்களின் இந்த பிரச்சனைகளை போக்க கூடியது. இதற்கு வாழைப்பூவின் உள்ளிருக்கும் வெண்மையான பாகத்தை சிறிது எடுத்து சுத்தம் செய்து சாறு எடுத்து அதனுடன்  சிறிது மிளகுத்தூள், மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் ரத்த போக்கு நிற்கும். வலியும் குறையும்.