விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்

https://tamilnewsdesk.blogspot.com/


விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்


திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு தம்பதியும் தங்களுக்கு ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். கருவுறுதலுக்கு ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதன் இயக்கம் மற்றும் அளவு ஆகியவை  நேரடித் தொடர்பை கொண்டுள்ளன. குழந்தை உருவாக ஆரோக்கியமான விந்தணுக்களை மேம்படுத்துவது  மிகவும் அவசியம். விந்தணுக்களின்  எண்ணிக்கையை அதிகரிக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கருவுறுதலுக்கு ஆண்களின்  விந்தணுக்களின் எண்ணிக்கை ஒரு முக்கிய காரணியாகும். குறைந்த விந்தணு எண்ணிக்கை ஆண்களின் இனப்பெருக்க அமைப்பை பாதிக்கும். புகைபிடித்தல்மது அருந்துதல் போதைப்பொருள் உட்கொள்ளல் போன்ற பழக்கங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையும்வீரியத்தையும் குறைக்கின்றனஅதனால் அவற்றை விட்டு விட வேண்டும்.

சில உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இங்கே ஆண் மலட்டுத்தன்மை நீங்க ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மற்றும் விந்தணு இயக்கத்தை அதிகரிக்க உதவும் உணவுகள் பற்றிய விவரம் இங்கே.....

விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய உணவுகளை இங்கே கொடுத்துள்ளோம். விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த இந்திய உணவுகள் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.

கீரை

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்

பச்சை இலை காய்கறிகள் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகள்.

பசலை கீரைமுட்டைக்கோஸ்கொத்தமல்லி இலைகள் முருங்கை கீரை போன்ற பச்சை இலை காய்கறிகளை நீங்கள் உணவில் சேர்க்க வேண்டும். ஃபோலிக் அமிலம் நிறைந்தபச்சை இலைக் காய்கறிகள் ஆரோக்கியமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. தினசரி உணவில் பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வால்நட்

 

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்

ஒரு சிறிய கிண்ணம் வால்நட் பருப்புகள் உடலுக்கு புரதங்களையும் ஆரோக்கியமான கொழுப்பையும் தருகிறது. ஆரோக்கியமான கொழுப்புகள் ஆண்களுக்கு மிகவும் அவசியமானவைஅவை விந்தணுக்களுக்கான உயிரணு சவ்வுகளை உருவாக்க உதவுகின்றன. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் விந்தணுக்களுக்கு இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதால்இது  விந்தணுவின் அளவை அதிகரிக்க உதவும்.

கருப்பு சாக்லேட்

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்

டார்க் சாக்லேட் சில வாரங்களில் விந்தணு இயக்கத்தை வேகமாக அதிகரிக்க உதவும் சிறந்த உணவு. டார்க் சாக்லேட்டை சாப்பிடுவதற்கு ஆரோக்கியமானதாக மாற்றும் கொக்கோ பீன்ஸ் இதில் அடங்கியுள்ளது.

டார்க் சாக்லேட்டில் எல்-அர்ஜினைன் (L-Arginine) எனப்படும் என்சைம் உள்ளது. இது விரைவாக விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. தினமும் சில துண்டுகள் டார்க் சாக்லெட் சாப்பிடுவது விந்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

முட்டை

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்

முட்டை விந்தணுவை அதிகரிக்கும் நல்ல உணவாகும்அதை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.முட்டையில் உள்ள புரதம் ஆண்களின் விந்துணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. விந்தணுக்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

முட்டைகள் விந்தணுக்களுக்கு ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாப்பைக் கொடுக்கும். தவிரஅவை விந்தணு இயக்கத்தையும் அதிகரிக்கின்றன. ஆரோக்கியமான விந்தணுக்களை உருவாக்கும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ளன.

வாழைப்பழம்

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்

வாழைப்பழம் வைட்டமின் ஏசி மற்றும் பிஆகியவற்றின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். இவை அனைத்தும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆரோக்கியமான விந்தணுக்களை உற்பத்தி செய்யவும் உதவுகின்றன. இதில் மெக்னீசியம் உள்ளதுஇது உங்கள் உடலின் விந்தணு இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. வாழைப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்சைம் விந்தணுக்களின் தரம் மற்றும் அளவை மேம்படுத்த உதவும். வாழைப்பழம்  விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க தினமும் உட்கொள்ள வேண்டிய சூப்பர் உணவு.

பூண்டு

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்

நாம்  அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகளில் ஒன்றாகும். பூண்டு இதய நோய் ஏற்படுவதை தடுக்கும்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பூண்டில்  உள்ள வைட்டமின் பிமற்றும் செலினியம்  ஆரோக்கியமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. அவை உடலுக்கு இரத்த விநியோகத்தையும் அதிகரிக்கின்றன. பூண்டு ஆண்களின் விந்தணு உற்பத்தியையும் இயக்கத்தையும் அதிகரிக்கிறது.

மாதுளை

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்

தினமும் மாதுளை பழம்  சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான விந்தணுக்கள் உற்பத்தி ஆகும். இந்த பழம் விந்தணுவின் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் விந்தணுவின் அளவை அதிகரிக்கிறது. தினமும் ஒரு டம்ளர் மாதுளை பழச்சாறு குடிக்கலாம். மாதுளையை வழக்கமாக உட்கொள்வது சில வாரங்களில் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

கேரட்

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்

கேரட்டில் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சத்துக்கள் உள்ளன. ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் கேரட்டை உட்கொள்வதால்அதிக அளவு விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியும் என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

சிப்பிகள்

சிப்பிகளை உட்கொள்ளும் ஆண்களுக்கு மற்றவர்களை விட அதிக விந்தணு இயக்கம் இருக்கும். இந்த உணவில் அதிக அளவு ஜிங்க் உள்ளது. துத்தநாகம் (ஜின்க்) விந்தணுக்களின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்க உதவுகிறது. தவிர இது ஒவ்வொரு நாளும் விந்தணு இயக்கத்தை சிறப்பாக செய்ய உதவுகிறது. இந்த உணவில் டாரின் மற்றும் கிளைகோஜன் உள்ளது. இந்த கூறுகள் ஆண்களில் இனப்பெருக்க அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.

பூசணி விதைகள்

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பூசணி விதை சிறந்த இந்திய உணவு. இந்த விதைகளில் உள்ள ஜிங்க் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவுகிறது. பூசணி விதையில் உள்ள ஒமேகா-கொழுப்பு அமிலங்கள் விரைகளுக்கு இரத்த விநியோகத்தை அதிகரிக்கின்றன. இந்த அமிலங்கள் விந்தணுவின் தரத்தை மேம்படுத்துவதோடு ஆண்களின் விந்தணு இயக்கத்தை அதிகரிக்கின்றன.பூசணி விதைகளை குழம்பு வகைகளில் சேர்க்கலாம் .அல்லது வறுத்ததாகவோ சாப்பிடலாம்.

அஸ்வகந்தா

ஜின்ஸெங் இந்தியாவில் அஸ்வகந்தா என்றும் அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாகஇந்த வேர் மருந்து மற்றும் உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. ஆண்களின் கோளாறுகளை குணப்படுத்துவதில் இந்த வேர் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது போதிய விறைப்புத்தன்மை இல்லாமை , குறைந்த விந்தணுக்கள் எண்ணிக்கைமுன்கூட்டிய விந்துதள்ளல் போண்டவற்றை குணப்படுத்துகிறது. அஷ்வகந்தா பொடியை பாலில் சேர்த்து குடித்து வந்தால்  நல்ல பலன் கிடைக்கும்.

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்

வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான விந்து மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளுக்கு மிகவும் அவசியம்.  இந்த வைட்டமின்கள் விந்து தரத்தை மேம்படுத்துகின்றன.  

சூரைகாணாகெளுத்தி  போன்ற மீன்கள்இறைச்சிபால் தானியங்கள்காளான்கள்தயிர் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்ஆண்களின் மலட்டுதன்மை பிரச்சனைகள் கண்டிப்பாக தவிர்க்கப்படும்.

துத்தநாகம் நிறைந்த உணவுகள்

துத்தநாகம் (Zinc) டெஸ்டோஸ்டிரோன் அளவையும்விந்தணுக்களின் உற்பத்தியையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் மிக அத்தியாவசியமான கனிமமாகும்.  பெரும்பாலான சந்தர்ப்பங்களில்ஆண் மலட்டுத்தன்மை ஏற்பட உடலில் துத்தநாகம் (ஜிங்க்) குறைவும் ஒரு  காரணம்  என்கிறார்கள். எனவே துத்தநாகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

சிப்பிகள்நண்டுகள்பீன்ஸ்முழு தானியங்கள்இறைச்சி கொண்டைக்கடலை போன்றவை துத்தநாகச் செறிவூட்டப்பட்ட உணவுகள் ஆகும்அவை விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணு இயக்கத்தின் உகந்த அளவைத் எட்ட மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றன.