மூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம்

https://tamilnewsdesk.blogspot.com/

 

மூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம்

மூட்டு வலி என்பது எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். பெரும்பாலும் வயதானவர்கள் இதில் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர்.

மூட்டுகளில் ஏற்படும் காயம் காரணமாக இருந்தாலும் அல்லது சில மருத்துவ நிலை காரணமாக இருந்தாலும், முழங்கால் வலி பலருக்கு அன்றாட நடவடிக்கைகளில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. சிலருக்கு இது ஒரு நீண்டகால பிரச்சினையாக கூட இருக்கலாம். மூட்டு வலி குணமாக வீட்டு மருத்துவம் உள்ளன, அவற்றை பின்பற்றுவதில் மூலம் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்...                           

மூட்டுவலி ஏன் வருகிறது

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் கால்சியம் குறைபாடு காரணமாக எலும்பு தேய்மானம் ஆவதால் மூட்டு வலி உண்டாகலாம்.

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு மூட்டுகளில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக மூட்டு வலி ஏற்படலாம்.

அதிகம் நேரம் உட்கார்ந்து வேலை செய்வது அல்லது அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது.

உடலுழைப்பு இல்லாதது மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது . 

 மூட்டு வலி நீங்க இயற்கை வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன, அவை மூட்டு  வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும். ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து காலையில் குடிக்கலாம். 

இஞ்சி சாறு

இஞ்சியில்  ஜின்ஜெரோல் எனப்படும் ஒரு கலவை நிரம்பியுள்ளது, இது இயற்கையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெற நீங்கள் இஞ்சி தேநீர் தயாரித்து தினமும் இரண்டு முறை குடிக்கலாம். 

இஞ்சி தேனீர்: ஒரு சிறிய இஞ்சி துண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பில் மெக்னீசியம் சல்பேட் உள்ளது, இவை ஒரு வலி நிவாரணி ஆகும். இது வீக்கத்தைக் குறைத்து வலியைக் குறைக்கிறது. ஒரு பக்கெட் குளியல்  நீரில் ஒரு ஸ்பூன் எப்சம் உப்பை வைத்து அதில் கால்களை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கலாம்.

 கற்பூரம் எண்ணெய்

கற்பூரம் பொடி கலந்த எண்ணெய் மூட்டு வலியை குறைக்கிறது. மூட்டுகளில் ஏற்படும் சிரமத்தை நீக்குகிறது, கற்பூர எண்ணெயைத் தயாரிக்க ஒரு கப் சூடான (இதமான சூட்டில்) தேங்காய் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் கற்பூரப் பொடியைச் சேர்க்கவும். வலி உள்ள இடத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை மசாஜ் செய்யவும். 

மஞ்சள்

மஞ்சள்: ஒரு சக்திவாய்ந்த ஆண்டிசெப்டிக் கலவை என்று அறியப்படும் மஞ்சள் குர்குமின் கொண்டிருப்பதால் வலியைக் குறைக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட முழங்காலில் தினமும் இரண்டு முறை தடவவும்.

ஐஸ் கட்டி

ஐஸ் கட்டிகளைப் ஒரு துணியில் சுற்றி    முழங்காலில் வலி உள்ள இடத்தில் ஒரு பத்து  நிமிடங்கள் ஒத்திடம் கொடுக்கலாம், இவ்வாறு செய்வது வலியைக் குறைப்பது மட்டுமல்லாமல், முழங்கால்களில் வீக்கத்தையும் குறைக்கிறது, 

மூட்டு வலி தைலம்

மூட்டு வலி குணமாக பிண்ட தைலம் பயன்படுத்தலாம். இந்த தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த தைலத்தை வலி உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் வலி குறையும்.

தவிர்க்க வேண்டியது

உணவில் புளியை சேர்ப்பதை குறைத்து கொள்ளுங்கள்.

சில கிழங்கு வகைகள் சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள் குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவை வாயுவை உண்டாக்கும் என்பதால் இவற்றை தவிர்த்து விடுங்கள்.

குளிர்ச்சியான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக குளிர்ந்த (ஐஸ் வாட்டர்) தண்ணீர் குடிப்பதை தவிர்த்தல் நல்லது.

முடக்கறுத்தான் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள். நடைபயிற்சி செய்வதால் உடல் எடை குறைவதோடு  மூட்டு வலியும் குறையும்.

யோகாசனம் போன்ற பயிற்சிகள் மூட்டு மற்றும் வாத வலியை குறைக்கும். தினமும் நடைப்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.