இரவில் நன்றாக தூக்கம் வர எளிய வழிகள்

https://tamilnewsdesk.blogspot.com/


இரவில் நன்றாக தூக்கம் வர எளிய வழிகள்

 தூக்கம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் ஆகும், எப்படி உணவு நமக்கு அவசியமோ, அதேபோல தான் தூக்கமும் சரியான நேரத்திற்கு தேவையான உணவு சாப்பிடவில்லை என்றால் என்ன பிரச்சனைகள் வருமோ, அதே போலத்தான் சரியான நேரத்திற்கு தூங்கவில்லை என்றாலும் தேவையான அளவு தூக்கம் இல்லாவிட்டாலும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். 

உங்கள் உடல் நலனுக்கு தூக்கம் எவ்வளவு அவசியம் என்பது பற்றியும் இரவில் நன்றாக   தூக்கம் வர எளிய வழிகள்     இங்கே விரிவாக கொடுக்க பட்டுள்ளது.  sleeping tips in tamil.                                                                            

 தூக்கம் அவசியம்

தூக்கமின்மை நிறைய பேருக்கு ஒரு பெரும் பிரச்சைனையாகவே இருக்கிறது. இரவில் தூங்கி  நடுஇரவில் விழுப்பு வந்துவிட்டால் மறுபடியும் தூங்குவது என்பது  நிறையபேருக்கு  மிகவும் கடினமான ஒன்று. அவர்கள் அதிகாலை வரை விழித்து கொண்டே இருப்பார்கள்,எதாவது ஒரு பிரச்சினையை பற்றி யோசித்து கொண்டே இருப்பார்கள். இப்படி செய்வதனால் அவர்கள்  உடல் சோர்வடையும். களைப்பாக உணருவார்கள். அடுத்த நாள் வேலையை  ஒழுங்காக செய்ய முடியாத நிலை ஏற்படும், உடல் நலமும் பாதிக்கும்.

ஒரு நாளைக்கு குறைந்தது  ஏழு மணி நேரமாவது தூங்குவது அவசியம் ஆகும். தூக்கம்  ஒன்று தான்  நம் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது, உடல்  தன்னை தயார் படுத்தி  கொள்ள உதவும்.அதனால் தூக்கம்  நமக்கு மிகவும்  அவசியமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  

இரவில் தூக்கம் வர தவிர்க்க வேண்டியவை

 

இரவில் நன்றாக தூக்கம் வர எளிய வழிகள்

இன்றைய காலத்தில் அறிவியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி காரணமாக தகவல் தொழிநுட்பங்கள் வேகமாக வளர்ந்து விட்டன. 

தொலைக்காட்சி மற்றும் செல்போன் மக்களின் ஒரு அங்கமாக மாறிவிட்டது இவைகளால் நல்ல பலன்கள் இருந்தாலும் சில பாதகங்கள் இருப்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

செல்போன்கள் பேசுவதற்காக மட்டும் என்ற காலம் மாறி உலகத்தையே உள்ளங்கையில் வைத்திருப்போன்றதுதான் இன்றைய நிலை, செல்போன்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்திக்கொண்டே தான்  செல்கிறது. இவைகளை பயன்படுத்துங்கள், ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை பயன்படுத்துங்கள், தூங்கும் முன் செல்போனை பயன்படுத்தாதீர்கள்

இரவில் நீண்ட நீரம் செல்போன் பயன்படுத்துவது உங்கள் தூக்கத்தையும் அதே போல் உங்கள் கண்களையும் பாதிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

அதேபோல் இரவில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதையும்  தவிர்த்து விடுங்கள். இவைகள் உங்களின் தூக்கத்தை கெடுத்துவிடும், இதற்கு பதிலாக நல்ல புத்தகங்களை சிறிது நேரம் படிக்கலாம்.

இரவில் தூங்குவதற்கு என்று வந்து விட்டால் அடுத்த நாள் செய்ய போக்கும் வேலைகள்,  திட்டங்கள் பிரச்சனைகள் பற்றி யோசிக்க கூடாது. அதுபோல இரவில் சீக்கிரமாக தூங்க செல்லுங்கள். 

காபி மற்றும் டீ

 

இரவில் நன்றாக தூக்கம் வர எளிய வழிகள்
                                                    

காபி  மற்றும் டீ ஆகிய இரண்டையும் இரவில் குடிப்பதை தவிர்ப்பது நல்லது இவை இரண்டும் தூக்கத்தை தடுக்கக்கூடியவை. காபி மற்றும் டீ குடிப்பதாக இருந்தால் மாலை நான்கு மணியோடு நிறுத்திக்கொள்ளுங்கள். 

மது பழக்கம்       

           

இரவில் நன்றாக தூக்கம் வர எளிய வழிகள்
                                                     

மது அருந்துவது  உங்கள் தூக்கத்தை கெடுப்பதோடு உங்களின் உடல் நலத்தையும் பாதிக்கும். மது குடித்தால்தான் தூக்கம் வரும் என்பது ஒரு சிலரின் எண்ணம். ஆனால் அது மிகவும் தவறு, இயற்கையாக வரும் தூக்கத்தை செயற்கையாக வரவைத்தால் அதன் பாதிப்புகள் மிகவும்  அதிகமாகும். நிம்மதியான தூக்கம் வர மதுப்பழக்கம் உள்ளவர்கள் அதனை அறவே  தவிர்ப்பது மிகவும் நல்லது .

தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்

பால்


இரவில் நன்றாக தூக்கம் வர எளிய வழிகள்


இரவில் தூங்கும் முன் பால் அருந்துவது நல்லது. பாலில் உள்ள டிரிப்டோபன் என்னும் அமினோ அமிலம்
  நல்ல தூக்கத்தை வரவைக்க கூடியது. இரவு தூங்கும் முன் ஒரு கப் பால் குடிப்பது நல்ல தூக்கத்தை கொடுக்கும் . 

இரவு உணவு                                                                      

இரவில் நன்றாக தூக்கம் வர எளிய வழிகள்
                               

இரவில் எளிதில் ஜீரணம் ஆகும் எளிய உணவை சாப்பிடுங்கள் அதிக காரம் மற்றும் புளிப்பு கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் குறிப்பாக எண்ணெய் அதிகம் சார்ந்த உணவுகள் வேண்டாம் தவிருங்கள்

இரவில் நம் உடல் இயக்கங்கள் நடைபெறாமல் ஓய்வில்  இருப்பதால் உணவு செரிப்பதற்கு நேரம் ஆகும். அதனால் தூங்குவதற்கு மூன்று மணிநேரம் முன்பாகவே இரவு உணவை முடித்து விடுங்கள்.

படுக்கை அறை

இரவில் நன்றாக தூக்கம் வர எளிய வழிகள்

உங்கள் படுக்கை அறையை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் உபயோகப்படுத்தும் தலையணை போன்றவை கடினமானதாக இல்லாமல் இலகுவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

அதேபோல் உங்கள் அறையில் அதிக வெளிச்சம் மற்றும் சத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  

தியானம்                    

இரவில் நன்றாக தூக்கம் வர எளிய வழிகள்

தினமும் தியான பயிற்சி செய்து வருவது நல்ல தூக்கத்தை கொடுக்கும். தினமும்  தியான பயிற்சிகள் செய்யுங்கள்.  தியானம் செய்து வந்தால் மனம் சாந்தபடும், இரவில்  நன்றாக தூக்கம் வரும். உங்கள் உடல் நலமும் மற்றும் மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும் . 

யோகாவில் சில மூச்சு பயிற்சிகள் உள்ள இந்த மூச்சு   பயிற்சிகளை முறையாக  செய்துவந்தால் இவை உங்கள்  உடல் மற்றும்  நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தி  நல்ல தூக்கத்தை கொடுக்கும். மேலும் உங்கள் உடல் நலனும் மேம்படும்.