உடல் எடை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்/weight gain foods in tamil

https://tamilnewsdesk.blogspot.com/உடல் எடை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்/weight gain foods in tamil


உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்ன உணவு சாப்பிடவேண்டும் என்கிற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கும், உடல் சற்று சதைபிடிப்போடு இருக்க வேண்டும் என்று ஆண்களும் பெண்களும் விரும்புவார்கள். உடல் எடை அதிகரிக்க வேண்டும் அதே சமயத்தில் உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 
உடல் எடை வேகமாக  அதிகரிக்க உதவும் உணவுகள் இங்கே விரிவாக கொடுக்கபட்டுள்ளது.

கலோரிகள்

உணவு மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தியை கலோரிகள் என்று கணக்கிட படுகின்றன.

ஆண்களுக்கு  2500 காலோரிகளும்  பெண்களுக்கு 2000 காலோரிகளும் தினமும் தேவைஇந்த அளவிற்க்கு மேல் உடலில் கலோரிகள் சேரும்போது உடல் எடை அதிகரிக்கிறது.

உடல் எடை அதிகரிக்க தினமும்  கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும், எந்த உணவை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதை பார்ப்போம்.

பால்

உடல் எடை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்/weight gain foods in tamil

பால் புரத சத்து நிறைந்தது மற்றும் இதில் தாதுக்கள் நிறைந்து உள்ளது, உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் வலிமை தரக்கூடியது உடல் எடை அதிகரிக்க செய்யக்கூடியது. 

தினமும் காலையில் ஒரு கிளாஸ் பால் (கொழுப்பு நிறைந்தது) குடிக்கலாம் இதோடு இரண்டு வேகவைத்த முட்டையின் வெள்ளை கருவை சாப்பிடலாம் (அல்லது) இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். இரவு தூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் பால் குடித்து வர வேண்டும். 

பாதம் 

உடல் எடை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்/weight gain foods in tamil

ஒரு கையளவு பாதம் பருப்புகளை இரவில் ஊறவைத்து காலையில் தோல் நீக்கி சாப்பிட வேண்டும், பாதம் பருப்பில் புரத சத்துக்கள் நிறைந்து உள்ளன, இவை உங்கள் உடல் எடையை  அதிகரிக்கும்.   (weight gain foods in tamil )

வாழைப்பழம் 

உடல் எடை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்/weight gain foods in tamil

வாழைப்பழம் உடலுக்கு உடனடி சக்தியை கொடுக்கக்கூடியது ,வாழைப்பழத்தில் கார்போஹைட்டிரேட் உள்ளது மேலும் இதில்  பொட்டாசியம் ,பாஸ்பரஸ் ,வைட்டமின் ஏ, விட்டமின் சி, புரத சத்து மற்றும் நார்சத்து நிறைந்து உள்ளது மேலும் இதில் இயற்கையான சர்க்கரை உள்ளது

ஒரு வாழைப்பழத்தில் 100 கலோரிகள் உள்ளன, உடல் எடை அதிகரிக்க தினமும் காலையில் உணவிற்கு பின் ஒரு வாழைப்பழம் மற்றும் இரவு உணவிற்கு பின் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

தயிர் 

உடல் எடை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்/weight gain foods in tamil

பாலில் உள்ள சத்துக்கள் போன்றே தயிரிலும் சத்துக்கள் உள்ளன.தயிரில் கால்சியம்,புரதம் வைட்டமின் ஏ மெக்னீசியம் மற்றும் ஒமேகா -6 உள்ளது ஒரு கப்  தயிரில் 220 கலோரிகள் உள்ளது. தயிர் தசைகள் பலம் பெற உதவும், இதில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு உறுதியை தரும்.

தயிரை மதிய உணவில் சேர்த்து கொள்ளுங்கள், அல்லது தயிரில் சர்க்கரை சேர்த்து லஸ்சியாக குடித்தால் உடல் எடை அதிகரிக்கும். இரவு வேளையில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கவும் .

உருளைக்கிழங்கு 

உடல் எடை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்/weight gain foods in tamil

உருளைக்கிழங்கு உடல் எடை அதிகரிக்க சிறந்த உணவாகும். உருளைக்கிழங்கில் கார்போஹைட்டிரேட் அதிகம் உள்ளது . பொதுவாக கார்போஹைட்டிரேட் உள்ள உணவுகள் உடல் எடையை அதிகரிக்க உதவும் உடல் எடை அதிகரிக்க தினமும் உணவில் உருளைக்கிழங்கை மதிய உணவில் அல்லது இரவு உணவில் சேர்த்து கொள்ளலாம் .

உருளைக்கிழங்கை வேகவைத்து அல்லது க்ரில் செய்து  சாப்பிடுவதே நல்லது எண்ணையில் போட்டு வறுத்து விற்கப்படும்  சிப்ஸ் போன்றவற்றை சாப்பிட கூடாது இது உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர வைக்கும்.

பாலாடை கட்டி (சீஸ் )

உடல் எடை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்/weight gain foods in tamil

பாலில் இருந்து கிடைக்கும் பாலாடை கட்டியில் கால்சியம் ,பொட்டாசியம் பாஸ்பரஸ் ,மாங்கனீஸ், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி உள்ளது, இதில்  கொழுப்பும் உள்ளது. பாலாடைகட்டி அதிக கலோரிகள் கொண்ட  உணவாகும். நூறு கிராம் கொண்ட  ஒரு பாலாடை  கட்டியில் சுமார் 390 அளவு கலோரிகள் உள்ளன இவை உடல் எடையை வேகமாக அதிகரிக்க செய்யும் உடலில் எலும்புகளை வலுப்பெற செய்யும். இதில் கொழுப்பு அதிகம் உள்ளதால் பாலாடை கட்டியை அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. 

முட்டை 

உடல் எடை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்/weight gain foods in tamil

முட்டை ஊட்டசத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த உணவாகும். தசைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரத சத்துக்கள் (புரோட்டின்) இதில் அதிகமாகவே உள்ளது. செலினியம் , கால்சியம், பொட்டாசியம் ,பாஸ்பரஸ் இதில் உள்ளன முட்டையில் 70 கலோரிகள் உள்ளது. முட்டையை வேகவைத்து சாப்பிடலாம். முட்டையில் கொலெஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் உடல் எடை  அதிகரிக்க  தினமும் இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். உங்களுக்கு தேவையான உடல் எடை அதிகரித்த பின்பு  தினமும் ஒரு மூட்டையாக குறைத்து கொள்ளலாம். 

மீன்

உடல் எடை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்/weight gain foods in tamil

மீன் ஒரு சிறந்த எளிய உணவாகும், மீனில் ஒமேகா -3 உள்ளது மற்றும் புரத சத்துக்கள் உள்ளன. மீனில் உள்ள ஒமேகா -3 சர்க்கரை நோய் , இருதய நோய்கள் வராமல் தடுக்கும். தசைகள் வலுவாக  மற்றும் உடல் எடை அதிகரிக்க வாரத்தில் இரண்டு முறை மீனை உணவில் சேர்த்து கொள்ளுஙகள்.

சிக்கன் 

சிக்கன் புரத சத்து நிறைந்த உணவு , இதில் வைட்டமின்கள் மற்றும் மீனெரல்கள் உள்ளன, விளையாட்டு வீரர்களின் உணவில் சிக்கன் கட்டாயம் இடம்பெற்று இருக்கும் .உடல் எடை வேகமாக அதிகரிக்க சிக்கன் சாப்பிடலாம். 100 கிராம் அளவு சிக்கனில் சுமார் 200 கலோரிகள் உள்ளது மதிய உணவில் சாதம் மற்றும் சிக்கன் சேர்த்து கொள்ளலாம்.