கால்சியம் நிறைந்த உணவுகள்

https://tamilnewsdesk.blogspot.com/
கால்சியம் நிறைந்த உணவுகள்

கால்சியம் என்பது நம் உடலுக்கு தேவைப்படும் முக்கியமான கனிமங்களில் ஒன்றாகும். இது குழந்தைகள், இளவயதினர் வயதானவர்கள் எல்லா வயதினருக்கும் அவசியமானது. குறிப்பாக பெண்களுக்கு கால்சியம் மிகவும் அவசியமாகும்.

ஏனெனில் பெண்கள் கால்சியத்தில்  குறைபாடுள்ளவர்கள். மாதவிடாய் காலங்கள்பிரசவ நேரம் மற்றும் தாய்ப்பால் கொடுத்த பிறகு பெண்களின் உடலில் கால்சியம் குறையத் தொடங்குகிறது.

அத்தகைய சூழலில் அவர்களுக்கு நல்ல உணவும் அதிக கால்சியமும் தேவைப்படுகிறது, கால்சியம் நிறைந்த  உணவுகள் உட்கொள்வது அவர்களின் கால்சியம் குறைபாட்டை தடுக்கும். 

உடல் ஆரோக்கியத்திற்கும் சமநிலை வளர்ச்சிக்கும் ஒவ்வொருவருக்கும் கால்சியம் தேவைப்படுகிறது. வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு அவர்களின் உடல், பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த கால்சியம் அவசியமாகும். 

நம் உடலுக்கு கால்சியம் ஏன் முக்கியமானது என்பதை அறிந்து கொள்வோம்.

கால்சியம்  எலும்புகள்தசைகள் மற்றும் பற்களின் வலிமைக்கு மற்றும்  உடலில் சில என்சைம்கள் மற்றும் ஹார்மோன்கள் உள்ளனஇவைகளின்  வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது.

நம் எலும்புகள் கால்சியம் மற்றும் பாஸ்பேட்டால் ஆனவை. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.  ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் கால்சியம் தேவைப்படுகிறது, இவர்கள் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம்.

கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள் பற்றி இங்கே பார்ப்போம். calcium rich foods in tamil

கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்

பால் 

கால்சியம் நிறைந்த உணவுகள்

பால் கால்சியத்தின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது.  அதனால்தான் நாம் தினமும் பால் குடிக்க வேண்டும் என்று ஊட்ட சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஒரு கிளாஸ் பாலில் சுமார் 300 மி/கி கால்சியம் அடங்கி உள்ளது. கால்சியம் குறைபாடு தான் பற்கள் மற்றும் எலும்புகள் பலவீனமடைவதற்கு காரணம். அதனால் தினமும் ஒரு கிளாஸ் பால் குடிப்பது அவசிமாகின்றது.

தயிர்

கால்சியம் நிறைந்த உணவுகள்

தயிரில் இருந்து கால்சியம் கிடைப்பது மட்டுமல்லாமல், புரத சத்தும் உள்ளது. குடலுக்கு நன்மை சேர்க்கும்  பாக்டீரியாக்களை கொண்டுள்ளது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம் உடலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

அத்திப்பழம்

கால்சியம் நிறைந்த உணவுகள்

அத்திப்பழம் கால்சியம் அதிகம் உள்ள பழங்களில் ஒன்றாகும். ஒரு கப் அத்திப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு 240 மில்லிகிராம் கால்சியம் கிடைக்கிறது, அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படாது

ப்ரோக்கோலி

கால்சியம் நிறைந்த உணவுகள்

காய்கறி வகையை சேர்ந்த ப்ரோக்கோலி குழந்தைகள் முதல் முதியவர்கள் மற்றும் பெண்கள்-ஆண்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்ஏனெனில் பால், தயிர் மற்றும் சோயாபீன்சுக்கு பிறகு ப்ரோக்கோலியில் தான் அதிகபட்ச கால்சியம் உள்ளது. 

ப்ரோக்கோலியில் கால்சியம் தவிரபாஸ்பரஸ், துத்தநாகம்  நார்சத்துக்கள் வைட்டமின் பி 6, வைட்டமின்-இமெக்னீசியம் குளோரின்வைட்டமின் பி -மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை கரோட்டின் வடிவத்தில் உள்ளன.

 பாலாடை கட்டி

கால்சியம் நிறைந்த உணவுகள்

பாலாடைக்கட்டிலும் கால்சியம் நிறைந்துள்ளதுஎனவே இதை  சாப்பிடுங்கள்இதில் கொழுப்பு அதிகமாக  இருக்கும் என்பதால் இதை குறைவாக சாப்பிடுங்கள்.

எள்

கால்சியம் நிறைந்த உணவுகள்

எள் கால்சியம் கொண்டள்ளது. ஒரு கிளாஸ் பாலுடன் டீஸ்பூன் எள் பொடி கலந்து குடிப்பது கால்சியம் குறைபாட்டைக் போக்க உதவுகிறது. 

ராகி

100 கிராம் ராகியில் 340 மி.கி கால்சியம் உள்ளது. ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களுக்கு கால்சியம் முக்கியமானது.

ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பல எலும்பியல் நோய்களைத் தடுக்க கால்சியம் நிறைந்திருப்பதால்பெண்கள் மற்றும் குழந்தைகள் ராகியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

பாதாம் பருப்பு

கால்சியம் நிறைந்த உணவுகள்

பாதாம் பருப்பில் உள்ள கால்சியம்  எலும்புகளையும் பற்களையும் வலிமையாக்குகிறது. கால்சியம் குறைபாட்டை பூர்த்தி செய்ய தினமும் ஒரு கிளாஸ் பாதாம் பால் குடிக்கலாம் அல்லது தினமும் பாதாம் பருப்புகள் சாப்பிடலாம்.

கீரை

கால்சியம் நிறைந்த உணவுகள்

கீரையில் நிறைய கால்சியம் உள்ளது.  100 கிராம் கீரையில் 99 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்ககீரையை வாரத்திற்கு 2 முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை கீரைகள், காய்கறிகளை உட்கொள்வது எலும்புகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பிற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

சோயாபீன்ஸ்

கால்சியம் நிறைந்த உணவுகள்

பாலுக்கு மாற்றாக சோயாபீன்சில்  கால்சியம் சத்து அதிகம் உள்ளது, பால் குடிப்பது பிடிக்காதவர்கள் சோயாபீன்சை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம் அல்லது சோயா பால் குடிக்கலாம்.

ஆரஞ்சு பழம்

கால்சியம் நிறைந்த உணவுகள்

ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது.ஒரு பெரிய ஆரஞ்சு பழத்தில் 74 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. வைட்டமின் சி அடங்கியுள்ளது. எலும்புகளை பலப்படுத்தும் கால்சியம் இதில் இருப்பதால் தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாம் அல்லது ஆரஞ்சு ஜுஸ் தயார் செய்து குடிக்கலாம்.