மீசை தாடி சீக்கிரம் வளர டிப்ஸ்

https://tamilnewsdesk.blogspot.com/


மீசை தாடி சீக்கிரம் வளர  டிப்ஸ்


மீசை மற்றும் தாடி   கருகருவென்று அடர்த்தியாகவும்  வேகமாக வளர வேண்டும் என்பது நிறைய ஆண்களுடைய ஆசையாக இருக்கிறது. குறிப்பாக இளவயதுடைய ஆண்கள் அழகான மீசை தாடி வைக்க விரும்புவார்கள். ஆனால் சில ஆண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும் சிலருக்கு குறைவாக இருக்கும்.

மீசை தாடி சீக்கிரம் வளர்வதற்கு அவர்களின்  மரபனு (genes) ஒரு காரணமாக இருக்கலாம்.

இது தவிர முக்கியமான ஒன்று ஆண்களின் உடலில் உண்டாகும் டெஸ்டோஸ்டீரோன் (testosterone) என்கிற ஹார்மோன்கள் தான். இந்த டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்கள் ஆண்களுடைய  முகத்தில்  உண்டாகும் முடிவளர்ச்சி உறுதியான தசைகள் மற்றும் குரல் மாற்றம் ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.

ஆண்களுக்கு இந்த டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்கள் உடலில் இருக்கும் அளவை பொறுத்துதான் ஆண்களின் தாடி மற்றும் மீசை வளர்ச்சி இருக்கும்.

இந்த டெஸ்டோஸ்டடீரோன் ஹார்மோன்களை உடலில் அதிகரிக்க செய்வதின் மூலம் முகத்தில் மீசை தாடி வளர்ச்சியை   வேகமாக அதிகரிக்க செய்யலாம்.

மீசை தாடி வேகமாக வளர வைக்க சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மற்றும் முக பராமரிப்பு செய்தாலே  போதும் நீங்கள் நினைப்பது போல் மீசை தாடி சீக்கிரம் வளரும். கருகருவென்று மீசை தாடி சீக்கிரம் வளர டிப்ஸ் (beard growth tips) இங்கே கிழே கொடுக்க பட்டுள்ளது.   

மீசை தாடி வளர என்ன செய்வது!

பயோட்டின் (வைட்டமின் பி   மற்றும் புரத சத்து  (ப்ரோடீன்) நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும். 

பயோட்டின் சத்து உடலில் முடிவளர்ச்சியை அதிகரிக்கும்.

 உணவுகள்.

மீசை தாடி சீக்கிரம் வளர  டிப்ஸ்

முட்டையில் புரத சத்து அதிகம் உள்ளது. மற்றும் முட்டையில் உள்ள விட்டமின் சத்துக்கள் உடலில் டெஸ்டோஸ்ட்டிரோன் ஹார்மோன்களை
அதிகரிக்க செய்து முகத்தில் முடி விரைவாக வளர வைக்கும்.உணவில் முட்டை சேர்த்து கொள்ளுங்கள்.

மீனில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது  .குறிப்பாக முகத்தில் முடி வளர்வதற்கு  தேவையான விட்டமின்  B புரதசத்து மற்றும் ஒமேகா சத்துக்கள்  உள்ளது.  உணவில் மீன் சேர்த்து கொள்ளுங்கள்.

காய்கறிகளில் பீன்ஸ்பீட்ரூட்கேரட்போன்றவை களை தினமும் உணவு சேர்த்து கொள்ளுங்கள்.      (beard growth tips )

மீசை தாடி சீக்கிரம் வளர  டிப்ஸ்

பாதம் பருப்புமுந்திரிபிஸ்தா பருப்புகளை தினமும் சாப்பிடுங்கள் இதில் இருக்கும் விட்டமின்கள்ப்ரோடீன் சத்துக்கள் முடிவளர்ச்சியை அதிகரிக்கும்.

மீசை தாடி வளர டிப்ஸ்.

மீசை தாடி சீக்கிரம் வளர  டிப்ஸ்

வாரத்திற்கு ஒரு முறை பேஸ் ஸ்க்ரப் (face srub) செய்ய வேண்டும். (கடைகளில் கிடைக்கும்) இந்த face scrub முகத்தில் தடவி விரல்களில் மசாஜ் செய்து ஒரு மூன்று நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

இப்படி செய்வதால் முகத்தில் முடிவளர்ச்சிக்கு தடையாக இருக்கும் இறந்த செல்கள் (dead cells) நீங்கி விடும்.இதனால் முகத்தில் புதிய முடிகள் வளர ஆரம்பிக்கும்.

காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளில் யூகோலிப்டஸ் (eucalyptus ) அடங்கிய பேஸ் வாஷ் கொண்டு முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து ஒரு இரண்டு நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடுங்கள் .

மீசை தாடி சீக்கிரம் வளர  டிப்ஸ்

தேங்காய் எண்ணெய் முடிவளர்ச்சிக்கு மிகவும் அவசியம். தேங்காய் எண்ணையை ஒரு ஸ்பூன் எடுத்து மீசை தாடி வளர கூடிய இடங்களில் தடவி உங்கள் விரல்களால் ஒரு ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து விடுங்கள்.

இப்படி செய்வதால் முகத்தில் ரத்தம் ஓட்டம் அதிகரித்து முடிவளர்ச்சி வேகமாகும்.தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் செய்து வாருங்கள்.

விளக்கெண்ணெய் முகத்தில் முடிவளர்ச்சியை தூண்டக்கூடியது . தேங்காய் எண்ணையுடன் விளக்கெண்ணெய் சேர்த்து முகத்தில் தடவினால் முகத்தில் முடிவளர்ச்சி அதிகரிக்கும். 

ஒரு  ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து இரவு தூங்க செல்லும் முன் முகத்தில் தடவி
ஒரு நான்கு நிமிடம் விரல்களால் நன்றாக மசாஜ் செய்து விட்டு விடுங்கள் காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடுங்கள் .
மீசை தாடி சீக்கிரம் வளர  டிப்ஸ்

ஆம்லா எண்ணையை முடிவளர்ச்சிக்கு அதிகம் பயன்படுத்துவார்கள் .முகத்தில் தாடி ,மீசை நன்றாக வளர ஆம்லா பயன்படுத்தலாம் .கடைகளில் கிடைக்கும் இந்த எண்ணையை வாங்கி கொள்ளுங்கள் .அதில் சிறுதுளிகள் எடுத்து தாடி ,மீசை வளரக்கூடிய பகுதிகளில் தடவி மசாஜ் செய்து விடுங்கள்.

ஒரு இருபது நிமிடனால் கழித்து முகத்தை குளிரிந்த நீரால் கழுவி விடுங்கள் அதனுடன் சிறிது அரைத்த  கறிவேப்பிலை இலையை இந்த எண்ணையுடன் கலந்து பயன்படு த்தினால் இன்னும் பயன் கிடைக்கும் .

மருதாணி இலை மற்றும் கறிவேப்பிலை இலை இரண்டையும் ஒரு உள்ளங்கை அளவு எடுத்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு கொதிக்க வைத்து ஆறவைத்து பின்னர் பயன்படுத்தலாம்.